உலக சுற்றுச்சூழல் தினம்: துணிப்பை தானியங்கி இயந்திரம் திறந்து வைத்த தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் (TNAU) மனிதச் சங்கிலி, மரக்கன்று வழங்கல், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் துணிப்பை விநியோகிக்கும் தானியங்கி இயந்திரம் திறப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


கோவை, ஜூன் 5: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (TNAU) இயற்கை வள மேலாண்மை இயக்ககத்தின் கீழ் செயல்படும் சுற்றுச்சூழல் அறிவியல் துறை சார்பில், உலக சுற்றுச்சூழல் தினம் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் பசுமை முன்னெடுப்புகளுடன் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.



“இயற்கையிலிருந்து ஊக்கம் பெறுவோம்! காலநிலைக்காக! நமது எதிர்காலத்திற்காக!” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் கா. சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற மனிதச் சங்கிலி நிகழ்வை அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் துணிப்பை விநியோகிக்கும் தானியங்கி இயந்திரம் பல்கலைக்கழக வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது.

மேலும், மரம் வளர்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் பலன்தரும் மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.

விழாவின் தொடக்கத்தில் சுற்றுச்சூழல் அறிவியல் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் அ. பரணி வரவேற்புரை வழங்கினார். இயற்கை வள மேலாண்மை இயக்குநர் முனைவர் சு. கார்த்திகேயன் துவக்கவுரை நிகழ்த்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பான கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.



மாணவர் நல மையத்தின் முதன்மையர் முனைவர் ஞா. பாலசுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, திரு. வி. திருநாவுக்கரசு இ.வ.ப. உலக சுற்றுச்சூழல் தினத்தின் முக்கியத்துவம் மற்றும் இயற்கை வளப் பாதுகாப்பின் அவசியம் குறித்து எடுத்துக்காட்டுகளுடன் விளக்கமளித்தார்.

இந்நிகழ்வின் ஒரு பகுதியாக இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்காக ஓவியம், கவிதை, புதையல் வேட்டை, விளம்பர நாடகம், மீம் உருவாக்கம் மற்றும் மாதிரி பசுமைத் தீர்ப்பாயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிகள் மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்குவித்ததோடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சியின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வையும் வலுப்படுத்தின.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, தனிமனிதர்களின் சிறிய செயல்பாடுகளே பெரிய மாற்றங்களை உருவாக்கும் என்பதை வலியுறுத்திய பல்கலைக்கழக நிர்வாகம், இயற்கை வளங்களைப் பாதுகாத்து நிலையான வாழ்க்கை முறையை அனைவரும் பின்பற்ற வேண்டுமென அழைப்பு விடுத்தது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...