தென்மேற்கு பருவமழை: கோவையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேக்கம் மற்றும் வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்க மின் மோட்டார்கள், ஜெனரேட்டர்கள், அவசரக் குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Coimbatore:

கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழையால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா தெரிவித்துள்ளார்.



கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் தேங்காமல் விரைவாக வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் தாழ்வான பகுதிகளில் கூடுதல் மின் மோட்டார்கள் மற்றும் ஜெனரேட்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

ரயில் நிலையம் மற்றும் லங்கா கார்னர் பகுதிகளில் 21 ஹெச்பி மற்றும் 20 ஹெச்பி திறன் கொண்ட இரண்டு மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவிநாசி மேம்பாலம் அருகே 28 ஹெச்பி, 30 ஹெச்பி, 12.5 ஹெச்பி, 25 ஹெச்பி மற்றும் 25 ஹெச்பி திறன் கொண்ட ஐந்து மின் மோட்டார்களும், 184 கிலோவாட் திறன் கொண்ட ஜெனரேட்டரும் தயார் நிலையில் உள்ளன.

கிக்கானி பள்ளி அருகே 28 ஹெச்பி, 20 ஹெச்பி மற்றும் 7.5 ஹெச்பி திறன் கொண்ட மூன்று மின் மோட்டார்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் காளீஸ்வரா மில் அருகே 36 ஹெச்பி, 21 ஹெச்பி மற்றும் 21 ஹெச்பி திறன் கொண்ட மூன்று மின் மோட்டார்களும், 125 கிலோவாட் திறன் கொண்ட ஜெனரேட்டரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மழை மற்றும் பலத்த காற்றின் போது சாலைகளில் மரங்கள் அல்லது மரக்கிளைகள் விழுந்தால் உடனடியாக அகற்றும் வகையில் கூடுதல் மரம் அறுக்கும் இயந்திரங்களும், மாநகராட்சி பணியாளர்களும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மழைநீர் தடையின்றி செல்லும் வகையில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்கள் மற்றும் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...