பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் விஷம் குடித்த காதலர்கள்: காதலி பரிதாப சாவு


தாராபுரம் உப்பர் டேம் பகுதியில் வசிப்பவர் மோகன். இவரது மகள் அஞ்சு (19). பீகார் மாநிலத்தை சேர்ந்த இவர்கள் தாராபுரம் பகுதியில் உள்ள கோழிப் பண்ணை ஒன்றில் பணியாற்றி வந்தனர். அங்கு திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சஞ்சீவ் (23) என்பவரும் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில், அஞ்சு மற்றும் சஞ்சீவுக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில், இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த அஞ்சு நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்த எலி மருந்தை உண்டு தற்கொலை செய்ய முயன்றார். இதையறிந்த அவரது பெற்றோர், அஞ்சு-வை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிசைக்காக அனுமதித்தனர்.

ஆனால், சிகிச்சை பலனின்றி அஞ்சு இன்று காலை பரிதாபமாக பலியானார். காதலி விஷம் அருந்தியதை அறிந்த சஞ்சீவ் நேற்று விஷம் குடித்தார். இதையறிந்த அவரது நண்பர்கள் சஞ்சீவை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். தற்போது சஞ்சீவ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...