கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன் குமார் தொடங்கி வைத்தார். நிலத்தடி நீர் வள மேம்பாடு, அடர்வனம் உருவாக்கம் மற்றும் தீவனப் பயிர் வளர்ப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.


Coimbatore:

கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொண்டம்பட்டி ஊராட்சியில், தனியார் தொண்டு நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன் குமார் கிரியப்பனார் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மோகன்பாபு, ராஜேஸ்குமார், சரவணன், கலாராணி, வாட்டர் டெக் நிறுவனத்தின் தலைமை மனிதவள நிர்வாக அலுவலர் லயோனல் பால் டேவிட், தனியார் தொண்டு நிறுவனப் பணியாளர்கள், அலுவலர்கள், ஈஸ்வர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை வள மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார். அதன் ஒரு பகுதியாக கொண்டம்பட்டியில் அடர்வனம் உருவாக்கும் பணி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.

வாட்டர் டெக் நிறுவனத்தின் பங்களிப்புடன் நிலத்தடி நீர் செறிவூட்டும் பணிகள், மழைநீர் சேகரிப்பு அமைப்புகள், பயன்பாடின்றி இருந்த ஆழ்துளைக் கிணறுகளை மீளச் செயல்படுத்தும் கட்டமைப்புகள் மற்றும் புதிய நீர்வள வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், முன்பு பயன்பாடின்றி இருந்த நிலப்பரப்பு சுற்றுச்சூழலுக்கு பயனுள்ள பகுதியாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மரக்கன்றுகளின் வளர்ச்சிக்குத் தேவையான நீர் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், கால்நடைகளுக்கான தீவனப் பயிர்களும் வளர்க்கப்படவுள்ளன. அவை இப்பகுதி விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் மரக்கன்றுகளை நடுவதோடு மட்டுமல்லாமல், அவற்றின் வளர்ச்சியையும் தொடர்ந்து கண்காணித்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.

முன்னதாக, சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பச்சாபாளையம் ஊராட்சியின் தேகாணி பகுதியில் தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் 3.55 ஏக்கரில் தூர்வாரப்பட்ட குளத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் மற்றும் நிலத்தடி நீர் வள மேம்பாட்டுக்கான நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...