மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசின் மாநில விருதுகள் வழங்கப்படவுள்ள நிலையில், விண்ணப்பங்கள் ஜூன் 25-க்குள் வரவேற்கப்படுகின்றன.


Coimbatore: மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவையாற்றிய தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளை கௌரவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் மாநில விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் தொண்டு நிறுவனங்கள், சமூகப்பணியாளர்கள், மருத்துவர்கள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்டோர் இந்த விருதுகளுக்கு நேரடியாக விண்ணப்பிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். தேர்வுக்குழு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, மாண்புமிகு தமிழக முதலமைச்சரால் மாநில விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.

தனிநபர் பிரிவில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றியவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனத்திற்கும் 10 கிராம் தங்கப் பதக்கம், ரூ.50,000 ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.

மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பான சேவை வழங்கிய சிறந்த மருத்துவர், அதிகளவில் வேலைவாய்ப்பு வழங்கிய தனியார் நிறுவனம், சிறந்த சமூகப்பணியாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகளவில் கடன் வழங்கிய மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகியோருக்கும் 10 கிராம் தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.

மாநில விருதுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் www.awards.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் வரும் ஜூன் 25, 2026-க்குள் நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் இரண்டு நகல்களை ஜூன் 25 மாலை 5 மணிக்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் ஒப்படைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு கோவைமாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை 0422-2380381 அல்லது 94999 33471 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...