ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவில் மாணவர் மன்ற பதவிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. 39 கிளப்புகளின் மாணவத் தலைவர்கள் மற்றும் செயலாளர்களும் பதவியேற்றனர். ரோட்டரி மாவட்ட ஆளுநர் R.S.மாருதி சிறப்புரையாற்றினார்.


Coimbatore: கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை கல்லூரியின் கலையரங்கில் நடைபெற்றது. S.N.R.சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் Dr.சுந்தர் ராமகிருஷ்ணன் விழாவிற்கு தலைமை தாங்கினார்.






கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் Dr.P.L.சிவக்குமார் மாணவர் மன்ற பதவிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். B.Com. C.A. துறை மூன்றாம் ஆண்டு மாணவி R.சங்கீதா மாணவர் மன்ற தலைவராகவும், B.Sc கணினி அறிவியல் Cyber Security துறை மூன்றாம் ஆண்டு மாணவி U.ஹேமாஸ்ரீ துணைத் தலைவராகவும் பதவியேற்றனர். B.Sc IT துறை இரண்டாம் ஆண்டு மாணவி K.காவியா செயலாளராகவும், BCA துறை இரண்டாம் ஆண்டு மாணவர் ருத்ர சர்மா துணைச் செயலாளராகவும் பதவியேற்றனர். இதேபோல் கல்லூரியில் செயல்படும் 39 கிளப்புகளின் மாணவத் தலைவர்கள் மற்றும் செயலாளர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.




விழாவின் சிறப்பு விருந்தினராக கல்லூரியின் முன்னாள் மாணவரும், தற்போதைய ரோட்டரி கோவை மாவட்ட ஆளுநருமான Rotarian R.S.மாருதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். விழாவில் அவர் பேசியதாவது: "நான் இந்த கல்லூரியில் படிக்கும் போது பெரிய அளவில் வெளி உலகம் தெரியாது. வேலை வாய்ப்புகள் குறைவு. தொழில்நுட்ப வளர்ச்சி இல்லை. ஆனால், தற்போது நான் இந்த கல்லூரியைப் பார்க்கும்போது அபரிவிதமான வளர்ச்சி அடைந்திருக்கிறது. இங்கு கல்விச்சூழல் பலமடங்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளது."






"உங்களுடைய திறனுக்கேற்ற 39 கிளப்புகள் இந்த கல்லூரியில் செயல்படுகின்றன. நீங்கள் மிகச் சரியாக பயன்படுத்தி உங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். AI போன்ற தொழில்நுட்பங்களை முழுமையாகப் பயன்படுத்தி இன்னும் நாம் பெரிய உயரங்களைத் தொட வேண்டும். தலைமைத்துவத்தில் எண்ணற்ற சவால்கள் நிறைந்துள்ளன. நீங்கள் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வெளியே வரும்போது ஒவ்வொரு சவாலையும் உங்கள் வளர்ச்சிக்கான வாய்ப்பாக அணுகி முன்னேற வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார்.




மேலும் பேசிய அவர், "நாம் எந்த வேலையைச் செய்தாலும் அதை முழுமையாக செய்பவராக இருக்க வேண்டும். நம் கல்விக்கேற்ற பணியைத் தேர்வு செய்து அதில் வெற்றி பெற வேண்டும். நமக்கு இருப்பது ஒரே ஒரு வாழ்க்கை, கிடைக்கும் வாய்ப்புகளைக் கைவசமாக்கி மகிழ்ச்சியாக வாழ பழகிக் கொள்ள வேண்டும். யாரையும் நம்பி இல்லாமல் தன் கையே தனக்கு உதவி என்ற நோக்கில் தன்னம்பிக்கையோடு முன்னேற வேண்டும்" என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.




"நம் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட வேண்டுமென்றால் நிறைய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த கல்லூரி உங்கள் வாழ்க்கையின் பெரிய இலக்கைத் தொட முழுமையாக ஆதரவு தரும். வாய்ப்புகளை சரியாக பயன்படுத்துங்கள். வெற்றி நிச்சயம்" என்று அவர் குறிப்பிட்டார்.




முன்னதாக, B.Com. C.A. துறைத்தலைவர் R.கீதா வரவேற்றார். முடிவில் தகவல் தொழில்நுட்பத் துறைத்தலைவர் N.சுமதி நன்றி கூறினார். இவ்விழாவில் மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...