வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கோவை குற்றாலம் சூழல் சுற்றுலாவை வனத்துறை தற்காலிகமாக மூடியுள்ளது.

கோவை: மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, கோவை குற்றாலம் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருதிகோவை குற்றாலம் சூழல் சுற்றுலா இன்று (ஜூலை 29) தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் அதன் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு குறைவாக இருந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக சிறுவாணி மலைப்பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக, கோவை குற்றாலம் அருவிக்கு வரும் நீரின் அளவு கணிசமாக அதிகரித்து, அபாயகரமான நிலையை எட்டியுள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது.

எனவே, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா இன்று (29.07.2026) முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது. நீர்வரத்து சீராகி இயல்பு நிலை திரும்பிய பின்னரே மீண்டும் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவர் என்று

போளுவாம்பட்டி வனச்சரக அலுவலர் அவசர அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்த திடீர் அறிவிப்பால், இன்று கோவை குற்றாலத்திற்கு செல்லத் திட்டமிட்டிருந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...