கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நம்பர் 10 முத்தூரைச் சேர்ந்த விவசாயி முருகானந்தம் என்பவர் கடந்த எட்டு நாட்களாக விதிமீறி செயல்படும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவை: பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கடவு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்ததாகக் கண்டறியப்பட்ட ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் உத்தரவிட்டுள்ளார்.

நம்பர் 10 முத்தூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி முருகானந்தம் கடந்த ஜூலை 21-ஆம் தேதி முதல், விதிமுறைகளை மீறி செயல்பட்டு வரும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுத்து அவற்றை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். எட்டு நாட்களாக நீடித்த அவரது போராட்டத்திற்கு விவசாயிகள், சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.



விதிமுறைகளை மீறி இயங்கும் கல்குவாரிகளால் கிணத்துக்கடவு மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக குவாரிகளில் அதிக அளவில் வெடிபொருட்கள் பயன்படுத்தி கற்கள் வெட்டி எடுப்பதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, கிணறுகள் வறண்டு வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், இதுதொடர்பாக பல ஆண்டுகளாக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகம், தாசில்தார், வருவாய்த்துறை என பல்வேறு துறை அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

போராட்டம் பரவலான கவனத்தை ஈர்த்ததைத் தொடர்ந்து, நேற்று சார் ஆட்சியர் தலைமையில் எட்டு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் 5 குவாரிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கல்குவாரிகளின் செயல்பாடு மற்றும் அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து விரிவாக ஆய்வு செய்தனர்.



அந்த ஆய்வறிக்கை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆறு கல்குவாரிகளின் செயல்பாட்டை தற்காலிகமாக நிறுத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 நிகழ்ச்சி: UPSC வெற்றியாளர் சிறப்புரை

கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 9, 2026 அன்று நடைபெற்ற YUVA 2026 – Freshmen In...

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...