பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், படித்துறையில் நீர்வரத்து இல்லாததால் விழா வழக்கமான உற்சாகத்தை இழந்த நிலையில், பேரூராட்சி நிர்வாகம் குழாய் மூலம் தண்ணீர் வழங்கி ஏற்பாடு செய்தது.

கோவை: ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு கோவை பேரூர் படித்துறையில் இன்று ஏராளமான பக்தர்கள் திரண்டு, தர்ப்பண மண்டபத்தில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஆற்றில் போதிய நீர்வரத்து இல்லாததால் ஆடி பதினெட்டாம் பெருக்கு விழா வழக்கமான உற்சாகத்தை இழந்தது. இருப்பினும், ஐதீகத்தின்படி பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்த பூஜைப் பொருட்களை படித்துறையில் முன்னோர்களுக்கு படைத்து வழிபாடுகளை மேற்கொண்டனர்.

ஆற்றில் தண்ணீர் இல்லாததால், பக்தர்கள் சடங்குகளை மேற்கொள்ளும் வகையில் பேரூராட்சி நிர்வாகம் குழாய் மூலம் தண்ணீர் வழங்கி சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது.



மேலும், விழாவையொட்டி பக்தர்கள் பயன்படுத்தி சென்ற பூஜைப் பொருட்கள் மற்றும் கழிவுகளை சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உடனுக்குடன் அகற்றி தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.

பக்தர்கள் அதிக அளவில் திரண்டதால், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் காவல்துறையினர் பல்வேறு இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...