கேரளா - தமிழக எல்லையில் ரயில் மோதி தாய் மற்றும் குட்டி யானை பலி; இரு மாநில வனத்துறையினர் விசாரணை

கேரளா எல்லைக்கு உட்பட்ட வாளையார்–சாவடிப்பாரா புதுப்பதி பகுதியில் மங்களூர்–சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தாய் யானையும் குட்டி யானையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. சம்பவம் தொடர்பாக கேரளா மற்றும் வாளையார் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை: தமிழக–கேரளா எல்லையான வாளையார் அருகே மங்களூர்–சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தாய் யானையும் அதன் குட்டியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநில எல்லைக்கு உட்பட்ட வாளையார்–சாவடிப்பாரா புதுப்பதி பகுதியில் நேற்றிரவுசுமார் 11.40 மணியளவில் காட்டு யானைகள் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக வந்த மங்களூர்–சென்னை எக்ஸ்பிரஸ் ரயில், தண்டவாளத்தை கடக்க முயன்ற தாய் யானை மற்றும் குட்டி யானை மீது மோதியது.

ரயில் மோதியதில் தூக்கி வீசப்பட்ட இரு யானைகளும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.



சம்பவம் கேரள மாநில எல்லைக்குள் நிகழ்ந்திருந்தாலும், தமிழக எல்லையில் இருந்து சுமார் 300 முதல் 400 மீட்டர் தொலைவில் நடைபெற்றதால், வாளையார் வனத்துறை அதிகாரிகள் மற்றும் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

இதையடுத்து, யானைகள் ரயிலில் மோதி உயிரிழந்த சம்பவம் குறித்து வாளையார் வனத்துறையினர் மற்றும் கேரள வனத்துறையினர் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடர்ந்த வனப்பகுதிகளை ஒட்டியுள்ள ரயில்வே பாதைகளில் ரயில்களின் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், மீண்டும் யானைகள் ரயிலில் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...