கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் குடிநீர், சாலை, சொத்துவரி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் 51 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. உடனடி நடவடிக்கைக்கு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையிலும், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS முன்னிலையிலும் இன்று (18.08.2026) நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 51 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.



பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், ஆக்கிரமிப்பு அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மேயர் மற்றும் ஆணையாளர் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இம்மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, ஷாஹுல் ஹமீது என்பவர் குடும்ப சூழ்நிலை காரணத்தினால் மாநகராட்சி கடையை நடத்திட இயலவில்லை என தெரிவித்ததன் அடிப்படையில், அவருக்கான வைப்புத் தொகை ரூ.50,000 இன்று காசோலையாக மேயர் மூலம் திரும்ப வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில் துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், துணை ஆணையாளர் த.குமரேசன், மாநகர தலைமைப் பொறியாளர் விஜயகுமார், நகர்நல அலுவலர் Dr.வீ.சி.சுபாஷ் காந்தி, நகரமைப்பு அலுவலர் தாமோதரன், உதவி ஆணையாளர்கள் பிரகாஷ் (நிர்வாகம்), மகேஷ்கனகராஜ் (வருவாய்), தட்சிணாமூர்த்தி (கிழக்கு), நர்மதா (மேற்கு), மோகனசுந்தரி (வடக்கு), கணேசன் (மத்தியம்), செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், ஆய்வாளர்கள், மண்டல சுகாதார அலுவலர்கள், பொறியாளர்கள் மற்றும் மாநகராட்சி அனைத்து அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...