கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினாசி சாலை ஆகிய பகுதிகளில் குழாய் பதிப்பு பணிகள் முடிவடைந்த பின்னர் சாலை சீரமைப்பு பணிகள் மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை மூலம் மேற்கொள்ளப்பட உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் 24x7 மணி நேர குடிநீர் திட்டப்பணிகள் முடிவடைந்த பகுதிகளில் விரைவில் சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

24x7 குடிநீர் திட்டப்பணிகளின் கீழ் தேசிய நெடுஞ்சாலைகளான திருச்சி சாலையில் போத்தீஸ் முதல் ஒண்டிப்புதூர் மேம்பாலம் வரையிலும், மேட்டுப்பாளையம் சாலையில் அவினாசிலிங்கம் கல்லூரி முதல் ITI வரையிலும், சத்தியமங்கலம் சாலையில் உக்கடம் பேருந்து நிலையம் முதல் இராமகிருஷ்ணாபுரம் வரையிலும் குடிநீர் குழாய் பதித்தல் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

மேலும், மாநில நெடுஞ்சாலையான அவினாசி சாலையில் உப்பிலிபாளையம் முதل் சித்ரா வரையிலும் சாலையின் இருபுறங்களிலும் குழாய் பதிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த பணிகளுக்காக வெட்டப்படும் தார் சாலை பகுதிகள் விரைவில் சீரமைக்கப்பட உள்ளன.

தேசிய நெடுஞ்சாலைகளில் மாநகராட்சியின் மூலம் மாநகராட்சி ஒப்பந்ததாரர்களாலும், அவினாசி சாலையில் நெடுஞ்சாலைத்துறையின் மூலமும் சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக மாநகராட்சி சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குடிநீர் குழாய் பதிப்பு பணிகள் காரணமாக பாதிக்கப்பட்ட சாலைகள் விரைவில் சீரமைக்கப்படுவதால், பொதுமக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...