அதிமுக இரு அணிகளுக்கு இடையே கட்சி சண்டை இல்லை எனவும், நடப்பது பதவி சண்டை தான் எனவும் அதிமுக அம்மா அணியை சேர்ந்த சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் தெரிவித்துள்ளார்

சூலூர் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக அம்மா அணியை சேர்ந்தவருமான கனகராஜ் கோவை மாவட்டம் சூலுரை அடுத்த காமநாய்க்கன்பாளையத்தில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், தனியார் தொலைக்காட்சியில் அதிமுக அம்மா அணி எம்.எல்.ஏக்களுக்கு பேரம் பேசப்பட்டதாக ஒளிபரப்பான செய்திக்கு மறுப்பு தெரிவித்தார். ஒ.பன்னீர்செல்வம் அணிக்கு செல்லததால் தனது எதிரிகள் பொய்யான குற்றச்சாட்டில் சிக்க வைக்க முயற்சிப்பதாகவும், பெரும்பான்மையை நிருபிக்கவே கூவத்தூரில் தங்கி இருந்ததாகவும் விளக்கம் அளித்தார். 

கூவத்தூரில் பணப்புழக்கம் எதுவும் நடக்கவில்லை எனவும், சில அதிமுக உறுப்பினர்கள் ஒ.பன்னீர்செல்வம் பக்கம் செல்வதற்கு திமுகவினர் தான் காரணமெனவும் அவர் தெரிவித்தார். எம்.எல்.ஏ சரவணன் யார் என்றே தெரியாது எனவும், அவர் கூறிய புகார் குறித்து முழுமையாக அறிந்து வழக்கு தொடர உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஒ.பன்னீர்செல்வம் தனது அணிக்கு வருமாறு நேரடியாக அழைப்பு விடுத்தாகவும், அவரை விட எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக செயல்படுவார் என்பதால் ஒபிஎஸ் அணிக்கு செல்லவிலை எனவும் கனகராஜ் தெரிவித்தார். இரு அணிகள் இணைவதை மக்கள் ஏற்க தயாராக இருப்பதாகவும், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை மக்கள் வெறுக்க மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை 70 நாட்கள் காட்டாமல் வைத்திருந்ததே காரணமென அவர் தெரிவித்தார். 

மேலும் ஜெயலலிதாவை சசிகலா கொலை செய்ததாக புரளி பரவியதாகவும், அவர் கொலை செய்தாரா, இல்லையா என்பது ஆண்டவனுக்கே தெரியும், எங்களுக்கு தெரியாது எனவும் கனகராஜ் தெரிவித்தார். அதிமுக இரு அணிகளும் இணைய தயாராக இருப்பதாகவும், இரு அணிகளுக்கு இடையே கட்சி சண்டை நடக்கவில்லை எனவும், நடப்பது பதவி சண்டை தான் எனவும் கனகராஜ் தெரிவித்தார். ஒ.பன்னீர்செல்வத்திற்கு முதலமைச்சர் மற்றும் பொதுச்செயலாளர் பதவிகளை அளிக்க வேண்டுமென அவரது தரப்பினர் சொல்வதே இணைப்பிற்கு தடையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...