கோவை அரசு மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை மருத்துவம் தொடக்கம்

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சத்யபிரியா (19). இவருக்கு கடந்த சில நாட்களாக மூச்சுத் திணறல் மற்றும் தலை சுற்றல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் அவர் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சத்யபிரியா-வை மருத்துவர்கள் பரிசோதித்தபோது அவரது இருதயத்தில் சிறிய துளை இருப்பது கண்டறியப்பட்டது. 

தொடர்ந்து, அவருக்கு வெற்றிகரமாக இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதுதொடர்பாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் அசோகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 



முதன் முறையாக முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் இருதய அறுவை சிகிச்சை கோவை அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்டது. இது போன்ற அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள புதிய அறுவைசிகிச்சை இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளது. 25 நிமிடம் இருதய துடிப்பை நிறுத்தி மேற்கொள்ளும் இந்த சிகிச்சை மிகவும் நுணுக்கமானது. தனியார் மருத்துவமனையில் இந்த சிகிச்சையை மேற்கொள்ளும் போது 2 முதல் 3 லட்சம் வரை பணம் செலவாகும். எனவே, இருதய அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள இனி பொதுமக்கள் கோவை அரசு மருத்துவமனையை அணுகலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...