கொலை வழக்கு சாட்சிகளை வழக்கறிஞர் மிரட்டுவதாக கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார்

கோவை சிவானந்தாகாலனி பகுதியை சேர்ந்த அம்மாசை (43) என்ற பெண் கடந்த 2013-ம் ஆண்டு வழக்கறிஞர் ராஜவேல் என்பவரது அலுவலகத்தில் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணை கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்று வருகிறது. அம்மாசை கொலை வழக்கில் முறையான நீதி வேண்டி சிவானந்தாகாலனி பகுதியை சேர்ந்த ஆதிகணேசன் என்பவர் 'அம்மாசை கொலை- நீதிக்கான கூட்டமைப்பு' என்ற அமைப்பு தொடங்கினார்.



இவ்வழக்கு விசாரணை நேற்று முன் தினம் கோவை விரைவு நீதி மன்றத்தில் நடைபெற்றது. அப்போது சாட்சியளிக்க சென்ற ஆதிகணேசனுக்கு வழக்கறிஞர் ராஜவேல் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து, இது குறித்து ஆதிகணேசன் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மேலும், அம்மாசை கொலைவழக்கு சாட்சியங்களுக்கு நீதிமன்றத்தில் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், கொலை மிரட்டல் விடுத்த வழக்கறிஞர் ராஜவேல் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆதிகணேசன் அம்மனுவில் கூறியுள்ளார்.

Newsletter

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...