புலியகுளம் பகுதியில் பயிற்சி வழக்கறிஞர் தூக்கிட்டு தற்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த அவளப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் கூவலியப்பன். இவரது மகன் அமரேஷ் (27) இவர் கோவை சட்ட கல்லூரியில் சட்டக்கல்வி படித்து முடித்தார். மேலும், புலியகுளம் பகுதியில் தங்கி பயிற்சி வழக்கறிஞராக பணிபுரிந்த் வந்தார். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி அமரேஷ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அமரேஷ் நேற்று பலியானார். 

இது குறித்து அமரேஷின் சகோதரர் நாரயணசாமி ராமநாதபுரம் போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...