தடை செய்யப்பட்ட போடோ அமைப்பினர் கோவையில் அதிரடிக் கைது

அசாம் மாநிலத்தில் தடைசெய்யப்பட்ட தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த இருவரை கோவையில் இந்திய ராணுவ உளவுத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்.

அசாம் மாநிலத்தை தங்களுக்கென தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பயங்கரவாத செயலில் மக்களில் ஒரு பகுதியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து பிரிந்து தனி நாடு கேட்டு போராடும் நேஷனல் டெமாக்ரடிக் பிரன்ட் ஆப் போடோலாந்து என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

தடைசெய்யப்பட்ட இந்த அமைப்பைச் சேர்ந்த ஒருவரை தில்லியில் சில நாட்களுக்கு முன்பு தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்.ஐ.ஏ.) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் கோவை சித்தநாயக்கன்பட்டியில் அசாம் மாநிலத்தை சேர்ந்த 2 தீவிரவாதிகள் பதுங்கியிருப்பது தெரியவந்தது.



இதையடுத்து இந்திய ராணுவ உளவுத்துறை (எம்.ஐ.ஏ.) உயர் அதிகாரி பிரியதர்ஷினி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கோவை வந்து ஆய்வுப் பணியில் ஈடுபட்டு தில்லியில் கைதான தீவிரவாதி கொடுத்த தகவலின் அடிப்படையில் கண்காணித்து வந்தார். அப்போது சித்தநாயக்கன்பட்டியில் தனியார் கோழிபண்ணை ஒன்றில் இரு தீவிரவாதிகள் பதுங்கியிருப்பது கண்டறியப்பட்டது.



இதையடுத்து கோவை காவல்துறையினரின் உதவியுடன் நேற்று இரவு (வியாழனன்று) கோழிப்பண்ணைக்குள் ராணுவ உளவு பிரிவு படையினர் அதிரடியாக நுழைந்து அங்கிருந்த அசாம் தீவிரவாதிகள் இருவரை கைது செய்தனர்.

இந்த விசாரணையில் அவர்கள் அசாம் மாநிலத்தை சேர்ந்த உபேன்பு‌ஷன் மத்தேரி (41), பிக்காரம் பாசுமத்தேரி (32) என்பது தெரியவந்தது. அசாமில் தனி மாநிலம் கேட்டு போராடும் நே‌ஷனல் டெமாக்ரட்டிக் பிரண்ட்ஸ் ஆப் போடோலேண்ட் என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்தது.



தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள இவர்கள் கடந்த 2013 ஆம் ஆண்டு சித்தநாயக்கன்பட்டி வந்து கோழிப்பண்ணையில் வேலை பார்த்து வந்தது தெரியவந்தது. தற்போது இருவரிடமும் இரகசிய இடத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து, இந்த வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்ட நீதிபதி வெடியப்பன், இருவருக்கும் வரும் ஜூலை 21ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். தொடர்ந்து இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...