ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி துப்புரவு பணியாளர்கள் தர்ணா

குறித்த தேதியில் ஊதியம் வழங்க வேண்டும் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் இன்று கோவை மாநகராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாநகராட்சியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு மாதந்தோறும் ஏழாம் தேதி ஊதியமானது வழங்கப்பட வேண்டும். ஆனால், இந்த மாதம் 13-ஆம் தேதியான போதும் ஊதியம் வழங்கவில்லை என குற்றம்சாட்டி 300-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் கோவை மாநகராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் கடந்த சில மாதங்களாக ஒப்பந்த பணியாளர்களுக்கு குறித்த நேரத்தில் ஊதியம் வழங்காமல் இழுத்தடிப்பதாகவும், ஒவ்வொரு முறையும் போராடியே ஊதியம் பெற வேண்டி இருப்பதாக தெரிவித்தனர். குறித்த நேரத்தில் ஊதிகம் கிடைக்காததால் பல்வேறு பிரச்சனைகளை மாத மாதம் சந்திப்பதாக தெரிவித்தவர்கள், மாதம் தோறும் 5-ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.

மேலும் எந்த ஒரு பணி பலனும் இல்லாமல் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் மற்றும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர். தங்களது கோரிக்கை தொடர்பாக பல முறை மாநகராட்சி ஆணையரிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த முறை தங்கள் கோரிக்கை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட மாநகர சுகாதார துறை அதிகாரி, இம்மாதத்திற்கான ஊதியம் இன்று மாலைக்குள் வழங்கப்படும் எனவும், இனி வரும் காலங்களில் குறித்த தேதியில் ஊதியம் வழங்கப்படும் என உறுதி அளித்தார். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒரு தரப்பினர் கலைந்து சென்றனர். ஆனால் மற்றொரு தரப்பினர் ஊதியம் வரும் வரை போராட்டம் தொடரும் எனக் கூறி தங்களது தர்ணா போராட்டத்தினை தொடர்ந்து வருகின்றனர்.

Newsletter

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...