40 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்வில் பல்வேறு பரிமாணங்களில் பணியாற்றியவர் வெங்கைய நாயுடு- புதிய தமிழகம் கட்சி டாக்டர் கிருஷ்ணசாமி

இந்திய துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக போட்டியிடும் பாஜக வேட்பாளர் வெங்கையா நாயுடு ஆளும்கட்சி மற்றும் எதிர்க் கட்சியாக இருந்தபோது அனைத்து தரப்பினரையும் தனது பேச்சுத் திறனால் கவர்ந்தவர் என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி பேட்டி அளித்தார்.

மேலும், புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி கூறியதாவது:-

வெங்கையா நாயுடு விவசாய குடும்பத்தை சார்ந்தவர். மக்கள் பிரச்சனைகளை நன்கு அறிந்தவர். அவர் வெற்றி பெற வேண்டும். இதுவரை துணை ஜனாதிபதியாக இருந்தவர்கள் அனைவருமே அரசியலில் இல்லாதவர்களாக இருந்திருக்கிறார்கள். வெங்கையா நாயுடு தற்போது பொருப்பில் இருப்பதாலும் தினந்தோறும் மக்களையும் செய்தியாளர்களையும் சந்தித்து வருபவர் என்பதால் ஆக்கமும் செயல்பாடும் அதிகளவில் இருக்கும். 

மேலும், வெங்கையா நாயுடுவுக்கு தமிழகத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் தென்னிந்தியாவில் இருப்பவர்கள் அனைவரும் பெரும் ஆதரவு தந்து அவரை வெற்றி அடைய செய்யவேண்டும். தமிழகத்தில் கடந்த நான்கைந்து மாதங்களாகவே மணல் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்பு மணல் விற்பனையை அரசே ஏற்று நடத்தும் என கூறி ஆன்லைனில் விற்பனை செய்ய முன்வந்தது வரவேற்கத்தக்கது. முறைகேடுகள் அதிகளவில் நடப்பதாக புகார்கள் வருவது வருத்தமளிக்கிறது. அரசின் நோக்கம் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை. ஏழை எளியோர் வீடு கட்ட தட்டுப்பாடு இல்லாமல் ஓரிரு நாளில் மணல் கிடைக்கும் வகையில் மணல் விநியோகத்தை சீரமைக்க முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்தார்.

மேலும், கோவை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு செல்ல கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு குறுகிய ரயில் தடம் இருந்தது. பல ஆண்டுகளுக்கு பிறகு அகல ரயில் பாதை பணிகள் நிறைவடைந்து சோதனை ஓட்டம் நடைபெற்றும் கோவையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கும் ரயில்கள் இயக்கபடாமல் இருப்பதால் தென் மாவட்ட மக்களுக்கு அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் குறிப்பாக பகல் நேரங்களிலும் இயக்க வேண்டும்.

இவ்வாறு புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி பேட்டி அளித்தார்.

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...