பிரதம மந்திரியின் புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விவசாயிகளுக்கு ஆட்சியர் அழைப்பு

பிரதம மந்திரியின் புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் விண்ணப்பித்து தங்கள் பயிரினை காப்பீடு செய்து கொண்டு விவசாயிகள் பயன்பெற வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் மாவட்ட விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

2016- 1017 ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட இக்காப்பீட்டுத் திட்டம் நடப்பு 2017-2018 ஆம் ஆண்டிலும் நடைமுறைக்கு வந்துள்ளதால் கோவை மாவட்டத்தின் அறிவிக்கை செய்யப்பட்ட, வருவாய் கிராமங்களைச் சேர்ந்த அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை நடப்பு காரிஃப் பருவத்தில் பயிரிட உள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.

மேலும், இத்திட்டம் கோவை மாவட்ட விவசாயிகளை சென்றடைய ஏதுவாக வேளாண்மைத் துறையினரால் கிராம அளவில் விளக்கக் கூட்டங்கள் நடத்தவும், வட்டார அளவில் தகவல் மற்றும் சேவை மையங்களை அமைத்து விவசாயிகளுக்கு இத்திட்டததில் சேர வேண்டிய உதவிகளை செய்யவும் மாவட்ட நிர்வாகத்தினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, கோவை மாவட்டத்தினைச் சேர்ந்த அனைத்து தகுதியுள்ள விவசாயிகளும் இத்திட்டத்தில் சேர்ந்து பயனடைய கோவை மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...