கோவையில் பல்வேறு தொழில்நுட்பங்களுடன் புதிய பொழுதுபோக்கு மால் விரைவில் துவங்க உள்ளதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கோவையில் புரூக்ஃபீல்ட்ஸ் மற்றும் பன் மால் என்னும் பன்னடுக்கு வர்த்தக மால்கள் செயல்பட்டு வரும் நிலையில் புரோஜோன் என்ற பெயரில் சரவணம்பட்டி பகுதியில் புதிய மால் விரைவில் துவங்க உள்ளது. இதற்கான செய்தியாளர் சந்திப்பு சரவணம்பட்டியில் உள்ள அந்த மாலில் இன்று நடைபெற்றது.



அப்போது, செய்தியாளர்களிடம் அதன் உரிமையாளர் நிகில் சதுர்வேதி பேசுகையில், இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஐஎண்டியூ நிறுவனம் சார்பில் இந்தியாவில் முதல் மால் அவுரங்காபாத்தில் துவங்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என வர்ணிக்கப்படும் கோவையில் மிகப்பெரிய வணிக வளாகத்தை துவங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். 



தொழில் நகரமான கோவையில் மக்கள் ஒரே இடத்தில் பல்வேறு நிறுவனங்களின் பொருட்களை வாங்குவதை இம்மால் ஊக்கப்படுத்தும். இது நகரின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். இந்த வணிகவளாகம் ஒரே நேரத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளையும் ஒரே இடத்தில் இருந்து கண்காணிக்கும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். 



5 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த வணிகவளாகத்தில் 9 ஐனாக்ஸ் வகை திரையரங்குகள் அமைக்கப்பட உள்ளது. மேலும் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக புகையை வெளியேற்றும் வகையில் புகை வெளியேற்றும் இயந்திரங்களும் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.



Newsletter

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...