அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட திருப்பூர் காதுகேளாதோர் பள்ளி மாணவர்கள் கோவையில் செயல்படும் காதுகேளாதோர் பள்ளிக்கு மாற்றம்



திருப்பூர் காதுகேளாதோர் பள்ளி மாணவர்களை கோவையில் உள்ள அரசு காதுகேளாதோர் பள்ளிகளில் சேர்க்குமாறு கோவை மாவட்ட​ ​ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே கோதபாளையத்தில் திருப்பூர் காது கேளாதோர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் தாளாளர் முருகசாமி என்பவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, பள்ளியில் பயிலும் சுமார் 110-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளின் கல்வி கேள்விக்குறியானது. இந்நிலையில் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்து மாநில மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் கடந்த ஜூன் மாதம் 15ம் தேதி உத்தரவிடப்பட்டது. இதையடுத்து பள்ளியில் பயிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டு அப்பள்ளியில் பயின்ற மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் திருப்பூர் காது கேளாதோர் பள்ளியில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை கோவை மாநகராட்சி காது கேளாதோர் பள்ளி மற்றும் இன்பண்ட் ஜீசஸ் பள்ளியில் சேர்க்க கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் உத்தரவிட்டுள்ளார். மாணவர்களின் பெற்றோர்கள் மாற்று சான்றிதழ்களை பெற்று உடனடியாக புதிய பள்ளிகளில் மாணவர்களை சேர்க்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...