நீலகிரி பகுதியில் குடிநீருடன் கழிவு நீர் கலந்துவருவதைக் கண்டித்து பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

நீலகிரி மாவட்டம் உலிக்கல் பஞ்சாயத்து உட்பட்ட பகுதிகளில் குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருவதை கண்டித்து அப்பகுதி மக்கள் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்துள்ள உலிக்கல் பஞ்சாயத்துக்கு உட்பட உலிக்கல், திருவள்ளுவர் நகர், உலிக்கல் ஹட்டி ஆகிய பகுதிகளுக்கு பென்காம் எஸ்டேட் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.



இந்த நிலையில் உலிக்கல் அருகே உள்ள கழிப்பிடம் அருகே குடிநீர் குழாய் பழுதடைந்துள்ளது. இதனை உலிக்கல் பஞ்சாயத்தில் பணிபுரியும் குடிநீர் குழாய் சீரமைப்புப் பணியளர்கள் முறையாக பராமரிக்காததால் அந்த கழிப்பிடத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குடிநீருடன் கலந்து குழாய் வழியாக வருகின்றது.

இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று உலிக்கல் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு காலி குடங்களுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...