மத்திய அரசின் தமிழர் விரோதப் போக்கைக் கண்டித்து கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல்

ஜிஎஸ்டி வரி உயர்வு, வளர்மதி கைது, நீட் விவகாரம் உட்பட மத்திய அரசின் தமிழர் விரோதப் போக்கைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று கோவையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 750-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.



தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலம் முழுவதும் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கோவை மாநகரத்திற்கு உட்பட்ட 13 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். 

இதனையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதேபோல், கோவையின் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட 750-க்கும் மேற்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...