இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடல் தகுதி தேர்வுகள் பி.ஆர்.எஸ் மைதானத்தில் இன்று துவக்கம்

கோவை பி.ஆர்.எஸ் பயிற்சி மைதானத்தில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடல் தகுதி தேர்வுகள் இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறை காவலர், தீயணைப்போர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு கடந்த ஜீன் 21 ம் தேதி நடைபெற்றது. இதில் தேர்வு பெற்றவர்களுக்கான உடல் தகுதி தேர்வு இன்று 15 மையங்களில் நடைபெறுகிறது.  இதன் ஒரு பகுதியாக கோவை அவிநாசி சாலையில் உள்ள பி.ஆர்.எஸ் பயிற்சி மைதானத்தில் உடல் தகுதி தேர்வு இன்று துவங்கியது. 

இந்த உடல் தகுதி தேர்வு வருகின்ற 30 ம் தேதி வரையும், பெண்களுக்கான தேர்வு 31 ம் தேதியும் நடைபெற உள்ளது. இத்தேர்வில் நாள்தோறும் ஆயிரம் பேர் விதம் 3 ஆயிரத்து 875 பேர் பங்கேற்கின்றனர். இதில் உடற்கூறு அளத்தல், உடல் தகுதி தேர்வு, ஓட்டப்பந்தயம் சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்டவை நடத்தப்படுகின்றன. ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் இந்த உடல் தகுதி தேர்வில் பங்கேற்றுள்ளனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...