கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்


கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில் “இந்த குறைதீர் கூட்டத்தில் 32, 57, 59, 61, 62 ஆகிய வார்டுக்குட்பட்ட பகுதிகளில் தெரு விளக்குகள் சரிவர இயங்கவில்லை எனறு 8 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. 33, 57, 60 ஆகிய வார்டுக்குட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் அகற்றுதல் தொடர்பாக 6 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

56, 57 ஆகிய வார்டுக்குட்பட்ட பகுதிகளில் சாலை பழுது நீக்குதல் தொடர்பாக 4 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. 56, 57 ஆகிய வார்டுக்குட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் தொடர்பாக 2 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. 57-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்தல் தொடர்பாக 3 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. 61-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் அய்யம்மாள் என்பவருக்கு குடிநீர் இணைப்பு எண் வழங்குமாறு கோரிக்கை மனு பெறப்பட்டது.

இம்மனு மீது மாநகராட்சி ஆணையர் உத்தரவின்படி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு குறை தீர்க்கப்பட்டது.

இக்கூட்டத்தில் துணை ஆணையர் ப.காந்திமதி, கிழக்கு மண்டல உதவி ஆணையர் ரவிக்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...