பிளாஸ்டிக் பையுடன் சேர்த்து உணவினை உண்ட காட்டு யானைகள்-வீட்டின் உரிமையாளர்கள் வேதனை

மனிதன்- மிருக மோதல் குறித்து பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் மனிதர்களுக்கும், விலங்கினங்களுக்கும் இடையேயான மாறுபட்ட வாழ்வியல் முறைகளே முக்கிய காரணியாக விலங்குகின்றன. அதிலும், குறிப்பாக மனிதர்களுடன் ஒன்றிவாழ்ந்த யானைகள் மீது தற்போது மனிதர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விரோதம், வெறுப்புத் தன்மை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

உண்மையில் மனிதர்கள் யானைகளுக்கு எதிராகத்தான் செயல்படுகிறார்களா ?. யானைகளால் பாதிக்கப்பட்ட சில விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் மனக்குறைகள் அவ்வாறாக எதையும் பிரதிபலிக்கவில்லை. யானைகளின் வாழ்வியல் முறை அறிந்தே நிலங்களில் பயிரிடப்படுகின்றன. ஆனாலும், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஆன்மீக, கலாச்சார, பாரம்பரிய மற்றும் சமூக உறவுகளை பகிர்ந்து கொண்ட ஒரு விலங்குக்கு எதிராக மக்கள் தற்போது விரோதப் போக்கை கடைபிடிப்பது வேதனையளிக்கும் செயலாகவே உள்ளது. சிலர் விலங்கினங்கள் மீது, குறிப்பாக யானைகளின் மிது அளவுகடந்த அன்பையும் மேற்கொண்டு வருகின்றனர்.

வியாழக்கிழமை காலை கோவை நகரின் புறநகர்ப் பகுதியில் நடந்த சம்பவம் சற்றே சிந்திக்கவும் வைக்கிறது. இச்சம்பவம் கோவையில் பொதுவான யானை சந்திப்புகளில் ஒன்நாகவே இருந்தாலும் அதன் பின் நடைபெற்ற சம்பவம் நெகிழ்ச்சியடையும் வகையில் உள்ளது. 

தீத்திபாளையம் அய்யாசாமி கோவில் தெரு, தெற்கு கார்டனில் ஒரு சாப்பாட்டு கடை உரிமையாளரான சன்முகம் வீட்டில் தாய் மற்றும் ஒரு குட்டி யானை இரவு 12.30 மணியளவில் இரும்பு வாயிலினை உடைந்து நுழைந்துள்ளது. தொடர்ந்து, அவரது வீட்டில் இருந்த கோதுமை, ராகி மற்றும் சோளம் உள்ளிட்ட கோழிக்குஞ்சுகளுக்கு வைத்திருந்த உணவுகளை உண்டுள்ளது. தொர்ந்து, வீட்டின் கூரையை உடைத்த யானைகள் வீட்டினுள் இருந்து காய்கறிகளையும் உட்கொண்டுள்ளது. இப்பகுதியில் இதுபோன்ற சம்பவம் பொதுவானவைதான்.



மேலும், அந்த யானைகள் தொடர்ந்து அப்பகுதியிலேயே ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முகாமிட்டு நின்று பின் அங்கிருந்து சென்றுள்ளது.

அணுகுமுறையில், வீட்டு உரிமையாளர்களுக்கு இது பெரிய தொகை அளவிற்கு இழப்பு ஏற்படுத்தியிருந்தாலும் அவர்கள் இழந்ததைப் பற்றி கவலைப்படவில்லை. 

அவர்களின் கவலையே அந்த யானைகள் உணவுடன் பிளாஸ்டிக் பைகளையும் உட்கொண்டதுதான். பிளாஸ்டிக்கின் நுகர்வு எந்த உயிரினத்திற்கும் மிகவும் தீங்கு விளைவிக்கும். குறிப்பாக மெதுவான செரிமான அமைப்பு கொண்ட யானை போன்ற விலங்குக்கு இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதே.



யானைகள் மனிதனைக் காயப்படுத்திய போதிலும், விலங்குகளின் உடல் நலத்திற்காக வீட்டின் உரிமையாளர்கள் கவலையாக இருந்தது ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. என்னதான் யானைகளால் தாக்கப்பட்டாலும், இழப்பு ஏற்பட்டாலும் யானைகள் மீது அளவுகடந்த இப்பகுதி மக்களின் அன்பு மரியாதைக்குறியது. 

மனிதர்களுன் உணவு, இடம் மற்றும் நீர் ஆகியவற்றிற்காகப் போராடும் இந்த மென்மையான ராட்சத மிருகத்தின் பாதுகாப்பிற்கு இத்தகைய குறைவான சமூகத்தினர் ஈடுபடுவது பெரும் உதவியாக இருக்கும்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...