ரயில்வே பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் உயராது - சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா



திருச்சி ரயில் நிலையத்தின் பிளாட்பாரம் டிக்கெட்டின் விலை 20 ரூபாயாக, உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் மையப்பகுதியாக விளங்கும் திருச்சி, பல்வேறு மாநில, மாவட்ட மக்கள் வந்து செல்வதற்கு சுலபமாக இருப்பதால், திருச்சி ரயில்வே ஜங்ஷனுக்கு, வருகைதரும், வெளிமாவட்ட, மாநில மக்கள், திருச்சி வழியாகத்தான் கடந்து செல்வது வழக்கம். அதோடு, வேளாங்கண்ணி, ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், மலைக்கோட்டை, கும்பகோணம் என ஆன்மிக பயணங்களுக்கும் திருச்சி வழியே செல்ல வேண்டும் என்பதால், திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் எப்போதும் பயணிகளின் எண்ணிக்கை கூடுதலாகவே இருக்கும். 

இந்நிலையில், தற்போது பிளாட்பாரம் டிக்கெட்டின் விலை 20-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட இந்த விலை உயர்வு, திருச்சி ரயில் நிலையத்தில் அமலுக்கு வந்துள்ளது. இந்தக் கட்டண உயர்வு வரும் செப்டம்பர் 30-ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என ரயில்வே துறை அறிவித்திருந்தது.

இந்நிலையில், ஈரோடு ரயில்வே இருபாலர் உயர்நிலைப்பள்ளியின் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்ட சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா நிருபர்களிடம் கூறியதாவது: தெற்கு ரயில்வே கோட்டத்தில் பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தும் உத்தேசம் இல்லை என்றும், தமிழகத்தின் மையப்பகுதியாக விளங்கும் திருச்சி ரயில் நிலையத்தில் மட்டுமே ரயில்வே பிளாட்பார்ம் டிக்கெட் விலை இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் இவ்வாறு, அவர் கூறினார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...