கோவையில் டெங்குவுக்கு மேலும் இருவர் பலி : 2 மாதங்களில் 19 பேர் பலியான பரிதாபம்

கோவையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் இன்று டெங்கு காய்ச்சல்க்கு இருவர் பலியான சம்பவம் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை கணபதி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்மூர்த்தி (43) டெங்கு காய்ச்சல் தொற்றுக்கு உள்ளான இவர் கோவை அரசு மருத்துவமனையில் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று கிருஷ்ணமூர்த்தி பலியானார். 

இதேபோல், பொள்ளாச்சியை சேர்ந்த புஷ்பலதா (28) என்பவரும் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை புஷ்பலதா பரிதாபமாக உயிரிழந்தார்.

கடந்த இரண்டு மதங்களில் மட்டும் டெங்கு காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 19-ஐ தொட்டுள்ளது. 

இச்சம்பவத்தால் பீதியடைந்துள்ள கோவை மக்கள் மாவட்ட நிர்வாகம் டெங்குவை கட்டுப்படுத்த முழு முயற்சிகள் மேற்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...