தமிழக அரசு சார்பில் விரைவில் இலவச "டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ்"



தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் டிஜிட்டல் மையமாக்கப்படுவதைத் தொடர்ந்து விரைவில் பொது மக்களுக்கு உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் இலவசமாக "டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ்" வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாதாவது:-

உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ் இலவசமாக வழங்கப்பட உள்ளதால் பொதுமக்கள் யாரும் தனியார் நிறுவனங்களின் செட்டாப் பாக்ஸை விலை கொடுத்து வாங்குவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையை உடனடியாக செலுத்தி இணைப்பு துண்டிப்பு செய்வதை தவிர்க்கவும். மேலும், சமீப காலமாக ஒரு சில உள்ளூர் கேபிள் டிவி நிறுவனத்தின் மூலம் உரிமை பெற்றுக்கொண்டு அரசு கேபிள் இணைப்பை துண்டித்தும், தனியாருக்கு சாதகமாகவும், பொதுமக்களை அச்சுறுத்தியும், கட்டாயப்படுத்தியும், தனியார் செட்டாப் பாக்ஸ் வாங்க வற்புறுத்துவதாக புகார்கள் வருகின்றன.

அவ்வாறு யாரேனும் செயல்பட்டால் சம்பந்தப்பட்ட உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்களின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும், டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ் பெறுவதற்கு ஒவ்வொரு உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் அவர்களது செட்டாப் பாக்ஸ் தேவைகளை வலைதளத்தில் www.tactv.in உள்நுழைவு (Login) செய்து CAF படிவத்தை தேர்வு செய்து அதில் சந்தாதாரர்களின் விவரங்கள், அதாவது பெயர், ஆதார் எண், பாலினம், மின் அஞ்சல், கைபேசி எண், பிறந்த தேதி, முகவரி, எஸ்டி செட்டாப் பாக்ஸ், எச்டி செட்டாப் பாக்ஸ் வீட்டு உபயோகத்திற்காகவா அல்லது வணிக பயன்பாட்டிற்காகவா போன்ற தகவல்கள் வரும் 2017 ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...