சிறை சாலைகளை கல்வி சாலைகளாக மாற்றுவதே நோக்கம்- கோவை மத்திய சிறை ஆய்வுக்கு பின் சைலேந்திரபாபு பேட்டி

சிறை சாலைகளை கல்வி சாலைகளாக மாற்றுவதே தமிழக அரசு மற்றும் காவல்துறையின் நோக்கம் என கோவை மத்திய சிறையில் இன்று ஆய்வு மேற்கொண்ட சிறைத் துறை ஏடிஜிபி சைலேந்திர பாபு கூறினார்.

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பின் போது சிறைத் துறை ஏடிஜிபி சைலேந்திர பாபு கூறியதாவது:-

கோவை மத்திய சிறை 1872 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. பழமை மற்றும் பாரம்பரியம் நிறைந்த இந்த சிறையில் தற்போது 1720 கைதிகள் உள்ளனர். பெண்களுக்கு தனியாக சிறை உள்ளது. கோவை மத்திய சிறை வளாகத்தில் பல ஆயிரக்கணக்கில் மரங்கள் உள்ளன. மேலும், புதிதாக 10 ஆயிரம் மரங்கள் நட முடிவுசெய்யப்பட்டு தற்போது 2 ஆயிரம் மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளன. இந்த மரங்களுக்கு சிறைவாசிகளே தண்ணீர் ஊற்றி வருகின்றனர்.

மேலும், சிறைக் கைதிகள் மற்றும் இங்கு வருவோருக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரே வழங்கப்பட்டு வருகிறது. சிறைக்கைதிகளுக்கென டெக்ஸ்டைல் மில்லும் செயல்பட்டு வருகிறது. இங்கு காவலர்கள் அணியும் காக்கி துணிகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

தமிழகத்தில் மொத்தம் 15 ஆயிரம் சிறைக்கைதிகள் உள்ளனர். அதில் 6 ஆயிரம் பேர் பல்கலைக் கழகம் மூலம் கல்வி மேற்கொண்டு வருகின்றனர். இன்று கோவை மத்திய சிறையில் உள்ள 8, 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 25 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன. சிறைச்சாலையை கல்விச் சாலையாக மாற்றுவதே எங்களது நோக்கம். மேலும், சிறையில் உள்ளவர்களுக்கு பல்வேறு துறைகளில் சிறப்புப் பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது" என்றார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...