நீலகிரியில் காவல்துறையினர் தகாத வார்த்தைகளால் பேசுவதாக மினி லாரி ஓட்டுநர்கள் காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் புகார்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் மினி லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் அனைத்து தொழிலாளர் சங்கம் சார்பில் காவல் துறையினரைக் கண்டித்து கோத்தகிரியில் இருந்து குன்னூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம் வரை வாகன பேரணியாக வந்து கோரிக்கை மனு அளித்தனர்.



இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், வாகன சோதனையில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினர் மினி லாரிகளில் அதிக பாரம் ஏற்றி வருவதாகக் கூறி 1000 முதல் 5000 ரூபாய் வரை அபராதம் விதிக்கின்றனர். மேலும் வாகன ஓட்டுநர் உரிமத்தை பறித்துக்கொண்டு எவ்வித விளக்கமும் சொல்லாமல் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சென்று பெற்றுக் கொள் என அழைக்கழிக்கின்றனர். மேலும், தகாத வார்த்தைகளால் பேசி மன உளைச்சல் ஏற்படுத்துகின்றனர் என தெரிவித்தனர்.

முன்னதாக, இந்த வாகன பேரணியால் குன்னூரில் 2 மணி நேரம் போக்குவரத்து நெரிச்சல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து குன்னூர் காவல்துறை துணை கண்கணிப்பாளர் முத்தமிழ்.அ. தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதுகுறித்து காவல்துறை துணை கண்கணிப்பாளர் கூறுகையில், இந்த விதிமுறைகள் அனைத்தும் உயர் நீதிமன்றத்தின் ஆணைப்படி செயல்படுத்தி வருகிறோம். இவர்களின் கோரிக்கையை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் முரளிரம்பாவிற்கு பரிந்துரை செய்கிறோம் என தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...