சமய நல்லிணக்கணம் குறித்து இலங்கை சிங்கள கிருத்துவ மாணவர்களுக்கு கலந்துரையாடல் நிகழ்ச்சி

கோவை, கரும்புக்கடை பகுதியில் அமைதுள்ள மஸ்ஜிதுல் இஹ்சான் பள்ளியில் இலங்கை சிங்கள கிருத்துவ மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று காலை10.30 மணிமுதல் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களின் தொழுகை முறை, இஸ்லாமிய அடிப்படை கொள்கைகள், பெண்களின் உரிமைகள், சமய நல்லிணக்கத்தோடு புரிந்து செயல்பட வேண்டிய அவசியங்கள், என பல்வேறு விஷயங்கள் குறித்தான கருதுப்பறிமாற்றம் நடைபெற்றது. 



நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இலங்கை மாணவ, இளைஞர்கள் தங்களுக்கு ஏற்பட்ட இஸ்லாம் பற்றியான சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர். இந்நிகழ்ச்சியினை கோவை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மக்கள் தொடர்பு செயலாளர் அப்துல் ஹக்கீம் ஒருங்கிணைத்தார், ஜமாஅத்தின் பொறுப்பாளர் ஜனாப். ஃபக்குருதீன் அலி அஹ்மத் சிறப்புரை ஆற்றினார். எஸ்.ஐ.ஒ கோவை மாவட்ட தலைவர் சபீர் அஹ்மத் மற்றும் ஜி.ஐ.ஒ கோவை மாவட்ட தலைவர், ஜுவைரிய உள்ளிட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மஸ்ஜிதுல் இஹ்சான் பள்ளிவாசல் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 



இறுதியாக, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அத்து நண்பர்களுக்கும் திருக்குரான் மற்றும் இஸ்லாத்தை பற்றியான அறிமுக மடக்கோலைகளும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியினை கோவைபுதூர், சாந்தி ஆஷ்ரம் பொறுப்பாளர்களுக்கும், (MASOOM) மஸூம் ஒருங்கிணைப்பாளர் பிரியதர்ஷினி மிக சிறப்பாக அமைத்து கொடுத்தார். இறுதியில், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை கிளையின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.



Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...