மாவோயிஸ்ட்டுகளுக்கு பென்டிரைவ் கொடுக்க முயன்றதாக கூறப்படும் வழக்கில் பார்த்திபன் என்பரை விடுதலை செய்யக்கோரி ஆட்சியரிடம் மனு

கோவை மத்திய சிறையில் உள்ள மாவோயிஸ்ட்டுகளுக்கு பென் டிரைவ் கொடுக்க முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ள அரசு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பைச் சேர்ந்த பார்த்திபன் என்பரை விடுதலை செய்யக்கோரி, பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



கடந்த ஜூன் மாதம் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாவோயிஸ்டுகள் அனூப் மற்றும் சைனா ஆகியோரிடம், ஆடையில் மறைத்துச் சென்று பென் டிரைவ் கொடுக்க முயன்றதாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த ரஷீது மற்றும் ஹரிஹர சர்மா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் பென் டிரைவ் கொடுத்து அனுப்பியதாக கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த அரசு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பார்த்திபன், கடந்த 11-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் பார்த்திபன் மீது காவல் துறையினர் பொய் வழக்கு பதிந்துள்ளதாகவும், அவரை விடுதலை செய்யக்கோரியும் தந்தை பெரியார் திராவிட கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பந்தயசாலை பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

இது தொடர்பாக அரசு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பைச் சேர்ந்த தினேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'உக்கடம் பகுதியில் மக்களுக்கு இடையூறாக விநாயகர் சதுர்த்தி விழா நடத்த எதிர்ப்பு தெரிவித்து மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் அளிக்க சென்ற பார்த்திபன் மீது போலீசார் பொய் வழக்கு பதிவு செய்து இருப்பதாகவும், மக்களுக்காக போராடுபவர்களை ஒடுக்கும் வகையில் காவல் துறையினர் செயல்படுகின்றனர்' என்றார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...