ஈஷா யோகா மையத்தில் 71-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

ஈஷா யோகா மையத்தில் 71-வது சுதந்திர தின விழா இன்று (ஆகஸ்ட் 15) 112 அடி ஆதி யோகியின் அருகாமையில் உள்ள மலை வாசலின் முன் கொண்டாடப்பட்டது. இதில் ஈஷா யோகா மையத்தை சுற்றியுள்ள கிராமப்புற மற்றும் பழங்குடியின குழந்தைகள், பெரியவர்கள், சுற்றுலா பயணிகள், பக்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



இந்நிகழ்ச்சியில், வெள்ளியங்கிரி உழவர் உற்பத்தியாளர் சங்க இயக்குனர் கிட்டுசாமி தேசிய கொடி ஏற்றி சிறப்பித்தார்.



தொடர்ந்து, இந்த விழாவில் சத்குரு வெளியிட்டுள்ள சுதந்திர தின செய்தி:-

"சுதந்திரம் அடைந்தது முதல்  நம் பாரத திருநாட்டில் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. நம் வியாபாரத்துறை வளர்ந்துள்ளது. தொழிற்சாலைகள் பெருகியுள்ளன. நமது விஞ்ஞானமும் குறிப்பிடத்தக்க வளர்ச்ச்சியடைந்துள்ளது. எல்லாவற்றிக்கும் மேலாக நம் வாழ்க்கை தரம் மேம்பட்டுள்ளது.

இவையனைத்தையும் விட குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் நமது விவசாயிகள் குறைந்த கட்டமைப்பு மற்றும் வசதிகளை கொண்டே  விவசாயம் பற்றிய தங்கள் பாரம்பரிய அறிவு, அனுபவம், மற்றும் திறமைகளை வைத்து 100 கோடிகும் அதிகமான  மக்களுக்கு உணவளித்து வந்துள்ளார்கள். ஆனால் நம் நீர் மற்றும் நிலத்தின் வழங்கள் குறைந்து கொண்டு இருப்பது  நம் விவசாயிகளின் வாழ்க்கையை கடினமாக ஆக்கி உள்ளது.

இந்த சுதந்திர நன்னாளில், நாம் அனைவரும் நம் தேசத்தின்  நதிகளை காக்க, நம் தேசத்தின் நீர் மற்றும் நிலத்தை (மண் வளத்தை) காக்க  உறுதி எடுத்துக்  கொள்ள வேண்டும். 'நதிகளை மீட்போம் பாரதம் காப்போம்".

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...