பெஸ்ட் பீப்பில்ஸ் காலனி வெல்ஃபேர் அசோசியேஷன் சார்பில் 71-வது சுதந்திர தினம் அனுசரிப்பு


கோவை மாவட்டம், சுப்ரமணியம்பாளையம் பகுதியில் உள்ள பெஸ்ட் பீப்பில்ஸ் காலனி வெல்ஃபேர் அசோசியேஷன் சார்பில் சுதந்திரதின விழா ஆகஸ்ட் 15 அன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. 

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 13ம் தேதியன்று குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்கான விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.



இதனைத்தொடர்ந்து, ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், பெஸ்ட் பீப்பில்ஸ் காலனி வெல்ஃபேர் அசோசியேஷன் தலைவர் டி.மோகன் ராஜ் வரவேற்புரையாற்றினார். செயலாளர் ஏ.குமரவேல் மற்றும் உறுப்பினர் கே.சந்திரசேகரன் ஆகியோர் இந்நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக வனிதா மணி நந்தகுமார் பங்கேற்றார். 

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரபல பட்டிமன்ற பேச்சாளர் மற்றும் கோவை அரசு கலைக் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர், பேராசிரியர் புனிதா ஏகாம்பரம் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

இதனைத்தொடர்ந்து, மாலை கலை நிகழ்ச்சிகளும், பரிசு வழங்குதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து, பெஸ்ட் பீப்பில்ஸ் காலனி வெல்ஃபேர் அசோசியேஷன் பொருளாளர் அசோக் குமார் நன்றியுரையாற்றினார்.

முன்னதாக, இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரிக்கால் மற்றும் சிறுதுளி மேலாண்மை இயக்குநர் வனிதா மோகன் நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகளுடன் கலந்துரையாடி மகிழ்வித்தார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...