ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தம்

கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு 8 மணி நேர வேலை வழங்குதல், ஊதிய உயர்வு, ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர் இன்று முதல் நாடு முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்திலும் அச்சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். 

இந்நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை கூட்ஸ்செட் சாலையில் உள்ள மாவட்ட தலைமை தபால் அலுவலகத்தில் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் நாடு முழுவதும் இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமிய அஞ்சல் ஊழியர்கள் பங்கேற்று இருப்பதாகவும், இப்போராட்டம் காரணமாக கிராமப்பகுதிகளில் பணப்பரிவர்த்தனை மற்றும் தபால் பட்டுவாடா பணிகள் முடங்கியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...