கோவை மாவட்டத்தில் தட்டுப்பாடின்றி உரம் வழங்க நடடிவக்கை எடுக்கப்பட்டுள்ளது- மாவட்ட ஆட்சியர்


கோவை மாவட்டத்தில் 139 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க உர விற்பனை நிலையங்களுக்கு விற்பனை முனை இயந்திரங்கள் வழங்கப்பட்டதன் மூலம் கோவை மாவட்டத்தில் தட்டுப்பாடின்றி உரம் வழங்க நடடிவக்கை எடுக்கப்பட்டுள்ளது  என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க உர விற்பனை நிலையங்களுக்கு விற்பனை முனை இயந்திரங்களை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் 139 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க உர விற்பனை நிலையங்களுக்கு வழங்கி தெரிவித்ததாவது:-

இந்திய அரசாங்கத்தின் வேளாண் துறை அமைச்சகம் நாடு முழுவதும் மானிய விலையில் விவசாயிகளுக்கு உரம் விற்பனையை முறைப்படுத்த விற்பனை முனை இயந்திரங்கள் உர தயாரிப்பாளர் மூலம் உர விற்பனையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக கோவை மாவட்டத்தில் ஸ்பிக் லிமிடெட் மூலம் தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு 193 விற்பனை முனை இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது கூட்டுறவு சங்கங்களுக்கு கிரிப்கோ உர நிறுவனம் மூலம் 139 விற்பனை முனை இயந்திரங்கள் வழங்கப்படுகின்றது.

இக்கருவி உபயோகத்தின் மூலம் மானிய உரமானது விவசாயிகளுக்கு சென்றடைந்த பின்பு உர உற்பத்தியாளர்களுக்கு மான்யம் சென்றடையும். இதன் மூலம் உர இருப்பு மற்றும் விநியோகம் எளிதாக கண்காணிக்க முடியும் என்றார். விவசாயிகள் உரம் வாங்கும் பொழுது ஆதார் எண் மற்றும் கைரேகை பதிவு செய்யப்படும் என்றார்.

மண்பரிசோதனை மற்றும் கிராம மண் தன்மைக்கேற்ப உரம் பரிந்துரைப்படி உரம் வாங்குவதால் உரத்தேவை அளவு குறைகிறது, விவசாயம் அல்லாத இதர பயன்பாட்டிற்கு பயன்படுத்துவது முற்றிலுமாக தவிர்க்கப்படும், விவசாயிகள் மண்பரிசோதனை முடிவின்படியோ அல்லது கிராம உர குறியீட்டின்படியோ உரங்களை வாங்க வழிவகை செய்கிறது, மத்திய அரசு உரங்களுக்கான நேரடி பயனீட்டு பரிமாற்றம் திட்டத்தை கொண்டு வந்து இருப்பதன்மூலம் உரப்பயன்பாடு முழுமையாக கண்காணிக்கப்படும். இத்திட்டத்தில் விவசாயிகள் எப்பொழுதும் போல் அதே மானிய விலையில் உரங்களை பெற்றுக்கொள்ளலாம்.

மின்னனு முனை இயந்திரம் கோவை மாவட்டத்தில் 139 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் உர இருப்பு மற்றும் விநியோகம் எளிதில் கண்காணிக்கபட்டு விவசாயிகளுக்கு உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைத்திடும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விற்பனை முனை இயந்திரத்தின் மூலம் உரம் விற்பவர் மற்றும் வாங்குபவர் பற்றிய முழுதகவல்கள் உறுதிப்படுத்தப்படும், அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலையில் மட்டுமே விவசாயிகள் உரம் வாங்க முடியும் எனவும், இதன் மூலம் உர விற்பனையில் ஏற்படும் முறைகேடுகள் முற்றிலுமாக தவிர்க்கப்படுவதோடு விவசாயம் அல்லாமல் வேறு பயன்பாட்டிற்கு உரத்தை பயன்படுத்த முடியாது என்று மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவளார் பிரபு, இணை இயக்குநர் (வேளாண்மை) பெருமாள், துணை இயக்குநர் சாமுவேல் மோகன்ராஜ், உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) வசந்தரேகா, கிரிப்கோ நிறுவன துணை மேலாளர் முத்துராமலிங்கம் மற்றும் தீபக் உட்பட வேளாண்மை மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...