காரைக்கால் - பெங்களூரு பயணிகள் ரயில் விபத்தில் பயணிகள் உயிர்தப்பினர்

இன்று காலை 11.47 மணியளவில் விருத்தாசலம் சேலம் பயணிகள் ரயில் எண்.76850 ஆத்தூர் சின்னசேலம் இடையே ஆளியக்கமற்ற லெவல் கிராசிங்கை கடக்கும் போது, டிரெயிலர் கொண்ட ஒரு டிராக்டர் அவசரமாக லெவல் கிராசிங்கை கடக்க முற்பட்டு ரயிலின் பின்புறம் உள்ள எஞ்சின் பகுதியை சேதப்படுத்தியது. 



இதனால் அந்த டிராக்டரின் டிரெயிலர் தனியாக பிரிந்தது. டிராக்டர் ஓட்டி வந்தவர் தனது டிராக்டரை விரைவாக ஓட்டி சம்பவ இடத்தில் இருந்து அகன்று விட்டார். ரயிலின் இயக்குநர் டிராக்டர் ஓட்டி தனது காதில் மொபைல் போன் ஹெட்செட் போட்டுக் கொண்டு வந்ததால் ரயில் சத்தத்தை கவனிக்காமல் விரைவாக வந்து ரயிலில் மோதியதாக தெரிவித்துள்ளார்.  



மதியம் 01.05 மணிக்கு சேலத்தில் இருந்து மீட்புப்பணிகளுக்காக ஒரு ரயில் அனுப்பப்பட்டு அது தற்போது சேதமான ரயில் நிறுத்தப்பட்டுள்ள சின்னசேலம் ரயில்நிலையம் சென்றடைந்துள்ளது. திருச்சி பொன்மலை ரயில்பணிமனையில் இருந்து பொறியாளர்கள் சேதமான ரயிலை ஆய்வு செய்து வருகின்றனர். ஆராய்ந்து அதை அப்படியே எடுத்து வர முடியுமா அல்லது சேதமான பகுதியை நீக்கி விட்டு எடுத்து வர முடியுமா என்று முடிவு செய்வார்கள். 



இந்த விபத்தால், காரைக்கால் பெங்களூரு பயணிகள் ரயில் எண் 56513 சின்னசேலத்தில் நிறுத்தப்பட்டு தற்போது சுமார் 2 மணி நேரம் தாமதமாக சேலம் நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இந்த விபத்தால் யாருக்கும் காயம் உயிரிழப்பு ஏதுமில்லை எதுவும் ஏற்படவில்லை. 

Newsletter

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...