கோவையில் இந்து முன்னணி பிரமுகர் விஷமருந்தி தற்கொலை



கோவை போத்தனூரை அடுத்த மேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (36). இந்து முன்னணி பிரமுகரான இவர் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி கழிவறையை சுத்தம்  செய்யும் ரசாயனத்தை அருந்தி தற்கொலைக்கு முயன்றார். தொடர்ந்து ரஞ்சித்குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரஞ்சித்குமார் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

தற்கொலை செய்துகொண்ட ரஞ்சித்குமார், இந்து முன்னணியின் மாநகர செய்தித்தொடர்பாளர் சசிகுமார் கொலையின் போது தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற ஆனந்த குமாரின் சகோதரர் ஆவார். 

முன்னதாகவே, போலீசார் தன்னை சசிகுமார் கொலையில் சந்தேகிப்பதாக கூறி வயிற்றை கிழித்து தற்கொலைக்கு முயன்றார். 

மேலும், கோவை அரசு மருத்துவமனையில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

இந்த நிலையில், மூன்றாவது முறையாக தற்கொலை செய்ய முயற்சித்தபோது ரஞ்சித்குமார் பலியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

இச்சம்பவம் குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.​ 

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...