வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை புதுப்பிக்க விண்ணப்பங்கள் வரவேற்பு

2011 முதல் 2015 வரையிலான ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் தங்களின் பதிவு மூப்பினை மீளப் பெறவும், அதன் மூலம் வேலைவாய்ப்பினை பெற்றிட உதவிடும் வகையிலும் 2017- 2018 ஆம் ஆண்டில் சிறப்பு புதுப்பித்தல் சலுகை அரசாணை எண் 500 தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை நாள் 2.8.2017 மூலம் வழங்கப்பட்டுள்ளது.

இச்சிறப்பு புதுப்பித்தல் சலுகையை பெற விரும்பும் பதிவுதாரர்கள் ஆன்லைக் வாயிலாக தங்களது பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம். மேலும், கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வேலைவாய்ப்பு பதிவு அடையாள அட்டை மற்றும் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் நேரில் வந்தோ அல்லது பதிவஞ்சல் மூலமோ தங்களின் பதிவை புதுப்பித்துக்கொள்ளலாம்.

இச்சலுகையானது 21.11.2017 வரை மட்டுமே வழங்கப்படும். இதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். 

எனவே, மனுதாரர்கள் இச்சலுகையை பெற்று பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...