காவிரி அணை மற்றும் நீட் தேர்வு விவகாரத்தை முன்வைத்து திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

காவிரியில் கர்நாடக அரசு அணை கட்ட நீதிமன்றத்தில் ஒப்புதல் அளித்தது, நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மாணவர்கள் ஏமாற்றப்பட்டது ஆகிய விவகாரங்களில் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கையை கண்டித்து கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அந்த அமைப்பின் கோவை புறநகர் மவட்ட தலைவர் வேலுச்சாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு சாதகமாக செயல்பட்ட தமிழக அரசை கண்டித்தும், நீட் தேர்வில் தமிழக மாணவர்களை நம்ப வைத்து ஏமாற்றிய மத்திய அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பபட்டது. 

பின்னர் பேசிய, திராவிடர் கழக நிர்வாகிகள் காவிரி விவகாரம், நீட் விவகாரம் ஆகிய இரண்டு முக்கிய கோரிக்கைகளை முன் வைத்து இந்த ஆர்ப்பாட்டம் மாநில அளவில் நடைபெறுவதாக தெரிவித்தனர். கர்நாடகத்தில் மேகதாது என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு தமிழக வழகறிஞர்கள் ஒப்புதல் கொடுததும், நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மாணவர்களை நம்ப வைத்து ஏமாற்றியதும் கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார். 

மேலும், நீட் தேர்வின் மூலம் மருத்துவப் படிப்பில் சி.பி.எஸ்.சி பாடப்பிரிவில் படித்த மாணவர்கள் அதிகமாகவும் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள் குறைவாகவும் சேர்ந்து இருப்பதாகவும், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் தங்களுக்கான மருத்துவப்டிப்பிற்கான வாய்ப்புகளை இழந்து இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...