தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் இருவார கால தூய்மை விழிப்புணர்வு நிறைவு நாள்

ரயில் நிலையங்கள் மற்றும் இதர ரயில்வே இடங்களை தூய்மையாக பராமரிக்கவும், ரயில் பயணிகள் மற்றும் இதர ரயில் உபயோகிப்பாளர்களிடையே அவ்வாறு தூய்மை மேம்பாட்டுக்கு ஒத்துழைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்திய ரயில்வே நாடெங்கிலும் 16.08.2017 முதல் 31.08.2017 வரையிலான இரு வாரகாலத்திற்கு சிறப்பு தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டது. 



தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் இந்த கால கட்டத்தில் சேலம் கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில்நிலையங்களிலும் சேலம் கோட்ட அதிகாரிகளும் ஊழியர்களும், பல்வேறு தூய்மை பராமரிப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழச்சிகளை தூய்மை விழிப்புணர்வு நாள், தூய்மை பிரச்சார நாள், தூய ரயில்நிலைய நாள், தூய ரயில்பெட்டிகள் நாள், தூய ரயில் உணவு நாள், தூய ரயில் குடிநீர் நாள், தூய கழிப்பறை நாள், போன்ற பல்வேறு விதங்களில் மேற்கொண்டனர். 









இந்நிகழ்வுகளில் சேலம் கோட்டத்தின் ரயில்நிலையங்களான சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், மேட்டுப்பாளையம், உதகமண்டலம், திருப்பத்தூர், மொரப்பூர், ஆத்தூர், சின்னசேலம், சேலம்டவுன், போன்ற இடங்களில் பல்வேறு அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆகியோருடன் பங்கேற்புடன் மேற்கொள்ளப்பட்டன. சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா தூய்மை பராமரிப்பு மற்றும் தூய்மை விழிப்புணர்வு நிகழ்வுகளில் ஆர்வமுடன் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்ததுடன், ரயில் நிலையங்களை தொடர்ந்து தூய்மையாக பராமரிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

Newsletter

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...