தியாகத் திருநாளான பக்ரித் பண்டிகை - கோவை மாவட்டம் முழுவதும் இஸ்லாமியர்கள் உற்சாகக் கொண்டாட்டம்



இஸ்லாமியப் பெருங்குடி மக்கள் ரமலானுக்கு அடுத்து கொண்டாடும் இரண்டாவது பெருநாள் பக்ரீத் பண்டிகையாகும். 

நபிகள் நாயகத்துக்கு முந்தைய இறைத்தூதர்களில் ஒருவரான இப்ராஹீம் அவர்கள் தவமிருந்து பெற்ற தன் குழந்தையை இறை கட்டளையின்படி பலியிட துணிந்த தியாகத்தை நினைவுகூர்ந்திடும் வகையில்தான் இப்பெருநாள் கொண்டாடப்படுகிறது.



இறையச்சம் இருந்தால்தான் இறையின் கட்டளைகளை நிறைவேற்ற இயலும் என்பதை உணர்த்தும் வகையில், இறைவனுக்குப் பிள்ளையைப் பலியிடும் மாபெரும் தியாகத்தைச் செய்ய இறைதூதர் இப்ராஹிம் துணிந்தார். ஆனால், இதனைத் தடுத்த இறைவன், ஆட்டை பலியிட செய்தார் என்றும், அதனடிப்படையில் காலம் காலமாக இஸ்லாமியர்கள் நினைவுகூர்வதே இப்பண்டிகையாகும். 



'ஈதுல் அழ்ஹா' என்னும் தியாகப் பெருநாளில் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றை இறையின் பெயரால் அறுத்து பலியிட்டு இறைச்சியை அனைவரும் பகிர்ந்துண்ணும் திருவிழாவாக இது கொண்டாடப்படுகிறது.



இந்த நன்னாளை, முன்னிட்டு, கோவை மாவட்டம் முழுவதும் உள்ள மசூதிகளில், இஸ்லாமிய மக்கள் சிறப்புத் தொழுகை நடத்தி இறைவனை வழிபட்டனர். மேலும். ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களையும் கூறிக் கொண்டனர்.

Newsletter

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...