நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கைக்கு எதிர்ப்பு - தற்காலிகமாக மாணவர் சேர்க்கையை நிறுத்தியது வேலூர் சி.எம்.சி. மருத்துவ கல்லூரி

வேலூரில் சி.எம்.சி. மருத்துவ கல்லூரியில் சேர தனியாக நுழைவுத் தேர்வு நடத்தபடும். அதில் அதிக மதிப்பெண் எடுப்பவர்களுக்கு நேர்முக தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கை நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு நீட்தேர்வு முறை அமல்படுத்தபட்டுள்ளது. நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கு சி.எம்.சி. நிர்வாகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சி.எம்.சி. சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து சி.எம்.சி. மருத்துவ கல்லூரியில் இந்த ஆண்டு மருத்துவ மணவர் சேர்க்கை நிறுத்தி வைக்கபட்டுள்ளது.

இது தொடர்பாக  சி.எம்.சி. நிர்வாக அதிகாரிகள் கூறுகையில்:- சுதந்திரத்துக்கு முன்பு ஆரம்பிக்கபட்ட சி.எம்.சி. மருத்துவ கல்லூரிக்கு தனி பாரம்பரியம் உள்ளது. அரசு உத்தரவுப்படி நீட் தேர்வை ஆதரிக்கிறோம். ஆனால் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சி.எம்.சி. தனியாக நுழைவுத்தேர்வு நடத்தும். அதில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு நேர்முக தேர்வு நடத்தபடும். 

அவர்களின் சமூக அக்கறை குழுவாக பணியாற்றும் பண்பு கிராமங்களில் சேவை செய்வது ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தபடும். நீட்தேர்வு அடிப்படையிலான நேரடி சேர்க்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். அக்டோபர் 11-ம் தேதி தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக அமையும் என நம்புகிறோம்  என்றனர்.

100 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சி.எம்.சி. மருத்துவ கல்லூரி இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் சேர்க்கையை நிறுத்திவைத்துள்ளது. மாணவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் அரசு உடனடியாக தடையில்லா நடிவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி உள்ளனர்.

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...