மாநில அளவிலான குடியரசு தினம் மற்றும் பாரதியார் தின சதுரங்கப் போட்டி துவக்கம்


மாநில அளவிலான குடியரசுத் தின மற்றும் பாரதியார் தின சதுரங்கப் போட்டியை சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி. வி.ஜெயராமன் துவக்கிவைத்தார். 

கோவை மாவட்டம் அரசம்பாளையம், எஸ்.வி.எஸ்.பொறியியல் கல்லூரியில் பள்ளிக் கல்வித்துறையின் மூலம் இன்று மாநில அளவிலான குடியரசு தின மற்றும் பாரதியார் தின சதுரங்கப் போட்டி துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி.வி.ஜெயராமன் கலந்துகொண்டு சதுரங்கப்போட்டியை துவக்கிவைத்தார்.



இதனைத்தொடர்ந்து அவர் பேசுகையில், தமிழகம் முழுவதும் உள்ள 7 முதல் 19 வயது வரை உள்ள மாணவ, மாணவிகள் பள்ளி, குறுமையம், மாவட்ட மற்றும் மண்டல அளவு என ஒவ்வொரு நிலையிலும் வெற்றி பெற்றவர் 360 பேர் மாநில அளவில் நடைபெறுகிற போட்டிகளில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

11, 14, 17 மற்றும் 19 வயதுக்கு கீழ் என உள்ள 4 பிரிவுகளில் சென்னை, கோவை, கடலூர், திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர், திருச்சி, வேலூர் மற்றும் விளையாட்டு விடுதி என 15 மண்டலங்களில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் இப்போட்டிகளில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, இணை இயக்குநர் (நாட்டு நலப்பணித்திட்டம்) செல்வகுமார், மாவட்ட கல்வி அலுவலர்கள் வனஜா, நசாரூதின், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் (பொ) கீதா மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...