வால்பாறை பகுதியில் மூன்றாவது நாளாக குடியிருப்புகளை சேதப்படுத்திய யானைகள்- பொது மக்கள் பீதி

வால்பாறை அடுத்த தமிழக அரசுக்கு சொந்தமான சின்கோனா எஸ்டேட்டில் உள்ள குடியிருப்பு பகுதியில் நேற்று நாள்ளிரவில் நுழைந்த பத்திற்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வாசுதேவன் மற்றும் ரோஸி என்ற தொழிலாளிகளின் வீட்டின் கதவுகளை உடைத்து அங்கிருந்த பொருட்களை சூறையாடியது.

இதனைத்தொடர்ந்து, சத்தம் கேட்டு தூக்கத்தில் இருந்த எழுந்த குடும்பத்தினர் பின் வாசல் வழியாக வீட்டை விட்டு வெளியேறி கூச்சலிட்டுள்ளனர். உடனே அங்கு விரைந்து வந்த அக்கம் பக்கம் வீட்டினர் தீ பந்தம் கொளுத்தியும், கூச்சலிட்டும் யானைகளை விரட்டியுள்ளனர்.



ஆனாலும், அந்த காட்டு யானைகள் அருகே உள்ள வனப்பகுதிக்குள் சென்று அங்கேயே முகாமிட்டுள்ளது.

மேலும் வால்பாறைக்கு உட்பட்ட கல்யாணபந்தல், நல்லமுடி, ஜெகமுடி உள்ளிட்ட பல்வேறு எஸ்டேட்டின் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் யானைகள் முகாமிட்டுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர்.



இந்நிலையில் நல்லமுடி சுற்றுலாபகுதியான காட்சிமுனை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல இன்று மூன்றாவது நாளாக வனத்துறையினர் தடைவிதித்துள்ளனர்.

இதனிடையே, வால்பாறை எஸ்டேட் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை வனத்திற்குள் விரட்ட கும்கி யானைகளை வரவழைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...