எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக வைத்த அலங்கார நுழைவாயிலால் வாலிபர் பலியான விவகாரம் : நடவடிக்கை எடுக்க கோரி காவல் ஆணையரிடம் எம்எல்ஏ மனு

கோவை, நவம்பர் 25

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக கோவையில் வைக்கப்பட்ட அலங்கார நுழைவாயிலால் வாலிபர் பலியானதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் ஆணையரிடம் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் மனு அளித்தார்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக அ.தி.மு.க. சார்பில் கோவை ஹோப்ஸ் பகுதியில் அலங்கார நுழைவு வாயில் வைக்கப்பட்டது. சாலையின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட இந்த நுழைவு வாயிலில் நேற்று இரவு வாகனம் மோதிய விபத்தில்  சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்த ரகுபதி என்ற வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த சூழலில், விபத்துக்கு காரணமான அ.தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இன்று மாலை சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் கோவை மாநகர காவல் ஆணையர் K. பெரியய்யா-விடம் மனு அளித்தார். 

தொடர்ந்து அவர் செய்தியாளர்களி கூறியதாவது:- 

நெடுஞ்சாலைகளில் மிகப்பெரிய அலங்கார வாயிகள் மற்றும் பேனர்கள் வைக்க கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருந்தபோதும் அ.தி.மு.க.வினர் தீர்ப்பை மதிக்காமல் பல அடி உயரத்தில் அலங்கார நுழைவு வாயில்களை கோவை மாநகராட்சி பகுதிக்குள் அமைத்துள்ளனர். 

இதனால் ஒரு வாலிபர் உயிரிழந்துள்ளார். 

மாநகர காவல்துறை ஆணையர்  இந்த பிரச்சனையில் தலையிட்டு வாலிபர் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த வாலிபருக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதியை தமிழக அரசு வழங்க வேண்டும். காவல்துறையினர் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருந்தால் தி.மு.க.சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும். 

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...