ஜெ., மரணம் விவகாரம்: விசாரணை ஆணையத்தின் பதவிக்காலத்தை நீட்டிக்கத் தமிழக அரசுக்குக் கோரிக்கை

டிசம்பர் 8

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதம் நீட்டிக்க வேண்டும் என நீதிபதி ஆறுமுகசாமி தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்திற்குக் கலச மஹாலில் அலுவலகம் ஒதுக்கப்பட்டு, டிசம்பர் 25 வரை 3 மாத அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக பலருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.. திமுக வழக்கறிஞர் சரவணன், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா கணவர் மாதவன் பேட்ரிக், மருத்துவர் சிவக்குமார், அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.

மேலும், சிலருக்கு சம்மன் அனுப்பியுள்ளதால், அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. எனவே, ஆணையத்திற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் போதுமானதாக இல்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், விசாரணை ஆணையத்தின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதம் நீட்டிக்க வேண்டும் எனத் தமிழக அரசின் பொதுத்துறைக்கு ஆறுமுகசாமி கடிதம் எழுதியுள்ளார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...