மானிய விலை இருசக்கர வாகனத்திற்கு விண்ணப்பிக்கக் கடைசி நாளில் அலைமோதிய கூட்டம்

மானிய விலையில் இரு சக்கர வாகனத்தைப் பெற பதிவு செய்வதற்கான கடைசி நாளான இன்று கோவையில் பெண்கள் கூட்டம் அலைமோதியது.

கோவை: மானிய விலையில் இரு சக்கர வாகனத்தைப் பெற பதிவு செய்வதற்கான கடைசி நாளான இன்று கோவையில் பெண்கள் கூட்டம் அலைமோதியது. 

தமிழக அரசு அறிவித்துள்ள மானிய விலையில் அம்மா இரு சக்கர வாகன திட்டம், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24 ம் தேதி துவங்கப்பட உள்ளது. 

இதனை, சுய தொழில் செய்யும் பெண்கள், அமைப்பு சாரா நிறுவனங்களில் பதிவு பெற்ற பெண்கள், வர்த்தக நிறுவனங்களில் பணி புரிவோர் உள்ளிட்ட 18 முதல் 40 வயது வரையிலான பெண்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. 

இதற்கான விண்ணப்பங்கள் கடந்த ஜனவரி 22-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வந்தன. விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி நாளான இன்று மாநகராட்சியின் மண்டல அலுவலகங்களில் பெண்கள் கூட்டம் அலைமோதியது. காலை முதல் ஏராளமான பெண்கள் நீண்ட வரிசையில் நின்று விண்ணப்பங்கள் மற்றும் ஆவணங்களைச் சமர்ப்பித்தனர். 

இத்திட்டத்தின் படி இரு சக்கர வாகன பெற தகுதி பெறுபவர்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வாங்க 25 ஆயிரம் ரூபாய் அல்லது வாகன விலையில் 50 சதவீதம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஜனவரி முதல் செப்டம்பர் வரை கோவையில் 132 பேர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

கோவை மாநகரில் 2026 ஜனவரி 1 முதல் செப்டம்பர் 9 வரை பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக 132 பேர் மீத...

Jan to Sep: 132 Offenders Placed Under Preventive Detention in Coimbatore

A total of 132 persons involved in various criminal activities were preventively detained under the Tamil Nadu Preventio...

கோவை மேயர் வ.உ.சி. மைதானத்தில் சர்வதேச நீச்சல் குளம் கட்டுமான பணிகளை ஆய்வு

கோவை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் வ.உ.சி. மைதான வளாகத்தில் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் சர்வதேச அளவிலான நீச...

மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதி இரு பாதசாரிகள் படுகாயம்

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பாதசாரிகள் படுகாயமடைந்தனர். திருமலைசாமி (45), ச...

புலியகுளத்தில் ஆம்புலன்ஸ் பேட்டரி திருட முயன்ற இரு இளைஞர்கள் கைது

கோவை புலியகுளம் ரோடில் ஆம்புலன்ஸ் பேட்டரிகளை திருட முயன்ற இரு வாலிபர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் பொதுமக்களால் கையும்...

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...